ஊரடங்கு உத்தரவு மீறல்: கோவையில் இதுவரை 19,208 பேர் கைது - ரூ.45 லட்சம் அபராதம் விதிப்பு


ஊரடங்கு உத்தரவு மீறல்: கோவையில் இதுவரை 19,208 பேர் கைது - ரூ.45 லட்சம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 10 May 2020 3:30 AM IST (Updated: 10 May 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறியதாக கோவையில் இதுவரை 19,208 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி சாலைகளில் அனாவசியமாக மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தும், கைது நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகிறார்கள். அத்துடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கோவை மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை புறநகர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 73 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் கோவையில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் இதுவரை மொத்தம் 16,952 வழக்குகளில் 19,208 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு மொத்தம் ரூ 45 லட்சத்து 6 ஆயிரத்து 850 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story