மகனை வெட்டிக் கொன்றவர் கைது


மகனை வெட்டிக் கொன்றவர் கைது
x
தினத்தந்தி 10 May 2020 3:15 AM IST (Updated: 10 May 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே சொத்து தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்,

பேரையூர் அருகே பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி (வயது 65). இவரது மகன் பழனிசாமி (20). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு பேரையூர் முத்துநாகையாபுரம் பகுதியில் வசித்து வந்தார். பழனிசாமி தனது தந்தையிடம் பெரிய பூலாம்பட்டியில் உள்ள வீட்டில் தனக்குரிய பங்கை கொடுக்குமாறு கடந்த ஓராண்டாக கேட்டு வந்தார். ஆனால் அவர் பங்கை பிரித்து தர வில்லையாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனிசாமி தனது மனைவியுடன் தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு தவசியிடம் தனது பங்கை பிரித்து தருமாறு கேட்டு அவர் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த தவசி பெற்ற மகன் என்றும் பாராமல் அரிவாளை எடுத்து சரமாரியாக பழனிசாமியை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தவசியை கைது செய்தனர்.

Next Story