சென்னையில் இருந்து திருப்பத்தூர் வந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை


சென்னையில் இருந்து திருப்பத்தூர் வந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 May 2020 9:45 PM GMT (Updated: 10 May 2020 4:05 AM GMT)

சென்னையில் இருந்து திருப்பத்தூர் வந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஒன்றியம் பகுதியில் உள்ள 9 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் சென்னை பகுதியில் அதிகஅளவில் கொரோனா பரவி உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் வேலை செய்து வந்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு வரத்தொடங்கி உள்ளனர். இவர்களை மாவட்ட எல்லை பகுதி மற்றும் சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அந்தந்த சுகாதார அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். 

நேற்று வரை திருப்பத்தூர், நெற்குப்பை, திருக்கோஷ்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 பேர் சென்னையில் இருந்து சமீபத்தில் திரும்பி உள்ளனர். இவர்களுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டுராஜ், டாக்டர் காாத்திக் மற்றும் மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். 

இதில் சில கர்ப்பிணிகளும் அடங்குவர். அவர்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு கவச உடை அணிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

Next Story