சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ‘சீல்’ ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
சேலம்,
தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. ஆனால் 48 கடைகள் தடை செய்யப்பட்ட பகுதியில் செயல்பட்டு வருவதால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. மீதமுள்ள 168 டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ந் தேதியும், 8-ந் தேதியும் திறக்கப்பட்டன. இதன் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களாக கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் மாலை அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் 2 நாட்களாக திறக்கப்பட்ட மதுக்கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. மேலும் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்குமாறு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
‘சீல்’ வைப்பு
இதன்படி சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் மதுக்கடைகளை நேற்று காலை பூட்டி ‘சீல்’ வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட மதுவகைகள் விவரம் மற்றும் கடையில் இருப்பு உள்ள விவரங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். சேலம் மாநகரில் முள்ளுவாடி கேட், டவுன் ரெயில் நிலையம் எதிரில், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழி, கன்னங்குறிச்சி, சிவதாபுரம், நெத்திமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அந்தந்த கடை ஊழியர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
மதுக்கடைகளில் ஏராளமான மதுபாட்டில்கள் இருப்பதால் அனைத்து கடைகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர போலீசார் அவ்வப்போது ரோந்து பணியை மேற்கொள்ளும்போது டாஸ்மாக் கடைகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவுபடி திறக்கப்பட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.17 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கும் மதுவகைகள் இருப்பதால் திருட்டு போகாமல் இருப்பதற்காக போலீஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Related Tags :
Next Story