சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு - கோவை போலீசார் நடவடிக்கை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கோவை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.
அதன்படி கோவையில் ஆத்துப்பாலம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் சில அரசியல் இயக்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி நடந்த இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இருபிரிவினருக்கும் இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சீமான் மீது அரசின் மீது அவதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் (124 (ஏ) மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் (153 (ஏ) 1 (ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story