சுழற்சி முறையில் தனிமைப்படுத்தும் திட்டம்: 578 போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை


சுழற்சி முறையில் தனிமைப்படுத்தும் திட்டம்: 578 போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை
x
தினத்தந்தி 11 May 2020 4:30 AM IST (Updated: 11 May 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

சுழற்சி முறையில் தனிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 578 போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் போலீசார் கடந்த 1½ மாதங்களாக விடுமுறையின்றி வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் சுழற்சி முறையில் 10 நாட்கள் தனிமைப்படுத்தும் திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,734 போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீசார் என 3 பிரிவுகளாக பிரித்து சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 578 போலீசார் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் போலீசார் 10 நாட்களும் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது. அவர்கள் குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க வேண்டும். அப்போது நன்கு ஓய்வு எடுப்பதுடன், கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story