சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சப்-கலெக்டர் ஆய்வு
சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சப்-கலெக்டர் ஆய்வு.
சின்னசேலம்,
சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூர், செம்பாக்குறிச்சி, அம்மகளத்தூர், கூத்தக்குடி, ரிஷிவந்தியம், பிரிவிடையாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த 93 பேர், சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 24 பேர் தற்போது அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் சின்னசேலம் அருகே தனியார் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தாசில்தார் வளர்மதி, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மண்டல அலுவலர் குணசேகரன், சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியிலும் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். அப்போது அவர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருபவர்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறார்களா? என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அவ்வாறு வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது தாசில்தார் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story