புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனியார் வாகனத்தில் சொந்த ஊர் திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கோரிக்கை
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனியார் வாகனத்தில் சொந்த ஊர் திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் என்று சஞ்சய் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை,
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி எதுவும் இல்லாததால் நடந்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இதுகுறித்து ஆளும் சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மராட்டிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் காட்சிகளை பார்க்க நன்றாக இல்லை. அவர்கள் தங்களுடன் குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். அவர்களுக்காக ரெயில்களை இயக்க மத்திய ரெயில்வே தயாராக இல்லை.
எனவே தனியார் வாகனங்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்ப மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். அவர்கள் தங்களின் நீண்ட பயணத்தின்போது நோய்வாய்படுகின்றனர். சிலர் இறந்தும் விட்டனர். அப்படியிருந்தும் அவர்களின் நடை நிறுத்தப்படவில்லை.
இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story