முத்துப்பேட்டையில் டாஸ்மாக் கடையில் திருட்டு வாலிபர் கைது; ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


முத்துப்பேட்டையில் டாஸ்மாக் கடையில் திருட்டு வாலிபர் கைது; ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2020 5:25 AM IST (Updated: 11 May 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில், டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டையில், டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டாஸ்மாக் கடை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள திருத்துறைப்பூண்டி ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 43 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந் தேதி இந்த கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.

மறுநாள்(8-ந் தேதி) 2-வது நாளாக இந்த கடை திறக்கப் பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க ஐகோர்ட்டு தடை விதித்ததை தொடர்ந்து கடை மூடப்பட்டது. அப்போது கடையின் உள்ளே 20 அட்டைப்பெட்டிகளில் 960 மதுபாட்டில்கள் வைக்கப் பட்டு இருந்தன.

மதுபாட்டில்கள் திருட்டு

இந்த கடையை ஒட்டி மரப்பட்டறை உள்ளது. இந்த மரப்பட்டறை வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், மதுக்கடையில் இருந்த மதுபாட்டில்களை திருடிச் சென்று விட்டதாக போலீ சாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், டாஸ்மாக் கடையின் உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடிச் சென்றது ஆலங்காட்டை சேர்ந்த மனோகரன்(வயது 34) என்பது தெரிய வந்தது.

கைது-பறிமுதல்

இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த மனோகரனை போலீசார் நேற்று மதியம் பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், திருடப்பட்ட மதுபாட்டில் களை டாஸ்மாக் கடையை அடுத்துள்ள மரப்பட்டறையில் பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் மரப்பட்டறைக்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். பின்னர் கைது செய்யப்பட்ட மனோகரனை போலீசார், திருத்துறைப் பூண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத் தினர்.

Next Story