தொழிலாளர்கள் வேலை நேரம் உயர்த்தப்பட்டதை கண்டித்து குமரியில் 20 இடங்களில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
தொழிலாளர்கள் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஆயிரம் நாட்கள் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும் நேற்று காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை தமிழகம் முழுவதும் வீடுகள், தொழிற்சாலைகள் முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள மில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மில் சங்க பொதுச்செயலாளர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மீன் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் அந்தோணி, தையல் கலைஞர்கள் சங்க தலைவர் ஜோசப், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் அசிஸ், வக்கீல் மரியஸ்டீபன், மில் சங்க பொருளாளர் ஜெஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
20 இடங்களில்...
இதேபோல் ராணித்தோட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சங்க செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமையிலும், கோட்டாரில் பிச்சைபால் தலைமையிலும், சிவன்கோவில் தெருவில் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க கிளை தலைவர் ஜெனிபர் தங்கப்பன் தலைமையிலும், அருகுவிளையில் ரமேஷ் தலைமையிலும், திருவள்ளுவர் தெருவில் பாய் தலைமையிலும், கிருஷ்ணன்கோவில் பரதர் தெருவில் மீன்தொழிலாளர் சங்க கிளைத்தலைவர் மீனா தலைமையிலும், தெலுங்கு செட்டித் தெருவில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் கலா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், முந்திரி ஆலை தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகங்களில் பதாகைகள் மற்றும் தொழிற்சங்க கொடிகளை ஏந்தி 15 நிமிடம் போராட்டம் நடத்தினர்.
வழக்குப்பதிவு
இந்த போராட்டம் தொடர்பாக நாகர்கோவிலில் 56 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், அந்தோணி உள்பட 19 பேர் மீதும், வடசேரி போலீஸ் நிலையத்தில் தங்கப்பன் உட்பட 37 பேர் மீதும் என மொத்தம் 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story