திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 115 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
115 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதை மீறி நேற்று வெளியே சுற்றியதாக 173 பேர் மீது 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்தியாவசிய காரணம் இன்றி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி சென்றவர்கள் மீது மொத்தம் 501 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் நேற்று வரை தடை உத்தரவை மீறிய 19,633 பேர் மீது 18,096 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,652 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
103 கடைகளுக்கு சீல்
மேலும், இருசக்கர வாகனத்தில் காரணமின்றி சுற்றியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 44,992 ஆகும். தொடர்ந்து வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 282 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு, இதுவரை 8,537 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் முசிறி, மணப்பாறை, துவாக்குடி பகுதிகளில் போலீசார் நடத்திய தீவிர மதுவேட்டையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 107 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வணிகம் செய்த 11 வணிக நிறுவனங்கள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்று வரை மொத்தம் 103 கடைகள் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story