நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு


நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு
x
தினத்தந்தி 11 May 2020 8:52 AM IST (Updated: 11 May 2020 8:52 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வழங்கினார்.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பல்வேறு தரப்பு மக்கள் பொருளாதார இழப்பு மற்றும் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் நகராட்சியில் பணியாற்றி வரும் 460 தூய்மை பணியாளர் களுக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 30 முட்டைகள் வீதம் வழங்கப் பட்டது. இதை மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வழங்கி னார். சமூக இடைவெளியுடன் தூய்மை பணியாளர்கள் நாற்காலிகளில் அமரவைக்கப் பட்டு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, துப்புரவு அலுவலர் சுகவனம், தி.மு.க நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், முன்னாள் நகர பொறுப்பாளர் மணி மாறன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story