பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் தங்களின் வீடுகள் முன் நின்று கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், தங்கள் வீட்டில் இருந்தவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகளில் 8 மணி நேர வேலையை, 12 மணி நேரமாக மாற்றக்கூடாது. ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்க வேண்டும். டாக்டர், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டில் இருந்தவாறு பங்கேற்றனர்.
கோஷம்
அவர்கள், தங்களது குடும்பத்தினருடன் வீடுகளின் முன் சமூக இடை வெளியை கடைப்பிடித்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story