ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் - தமிழக மது பிரியர்கள் திரண்டதால் போலீசார் திணறல்


ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் - தமிழக மது பிரியர்கள் திரண்டதால் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 12 May 2020 4:00 AM IST (Updated: 12 May 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளில் அலை மோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை, 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் ஆந்திர அரசுக்கு சொந்தமான மதுக்கடைகளை மூடப்பட்டன. இதனிடையே கடந்த 6-ந்தேதி ஆந்திர அரசு அனைத்து மதுக்கடைகளையும் திறக்க உத்தரவிட்டு இருந்தது. 

அதைத்தொடர்ந்து, 7-ந்தேதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, 8-ந்தேதி மாலையுடன் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்திற்குட்பட்ட தாசுகுப்பம் கிராமத்தில் 2 மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

நபர் ஒன்றுக்கு 3 குவார்டர்கள் மது பாட்டில்கள் வீதம் விற்கப்பட்டதால் குடிமகன்கள் உற்சாகமாக நீண்ட தூரம் வரிசையில் நின்று பாட்டில்களை வாங்கி சென்றனர். மதுக்கடைகளில் அலை மோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த ஆந்திர போலீசார் திணறி வருகின்றனர்.

ஆந்திராவை காட்டிலும் தமிழத்தை சேர்ந்த மதுபிரியர்களே அதிகமாக திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story