தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்த 46 பேர் வீடு திரும்பினர். 20 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 3 பேருக்கு உறுதி
இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கழுமங்கலத்தை சேர்ந்த 35 வயதான ஆணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரும் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர் ஆவார்.தாராசுரம் மார்க்கெட்டுக்கு வந்த டிரைவரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதானவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடலூரில் இருந்து உத்தரபிரதேசம் மாநிலம் சென்று அங்கிருந்து கோயம்பேடு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று விட்டு தாராசுரம் வந்தது தெரிய வந்தது.
69 ஆக உயர்வு
இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story