திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூரில் கடந்த சில நாட்களாக காலை தொடங்கி மாலை வரையில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்பத்தின் தாக்கத்தால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் நண்பகல் 12 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது.
தொடக்கத்தில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, குடிதாங்கிச்சேரி, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, பழையனூர், சித்தனங்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. நேற்று மாலை முழுவதும் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழையால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மன்னார்குடி, திருமக்கோட்டை
இதேபோல் மன்னார்குடி மற்றும் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த மழையால் முற்றும் நிலக்கடலை, எள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story