கொடியம்பாளையத்தில் இருந்து பழையாறு துறைமுகத்துக்கு செல்லும் பாதை அடைப்பு படகு போக்குவரத்து தடை


கொடியம்பாளையத்தில் இருந்து பழையாறு துறைமுகத்துக்கு செல்லும் பாதை அடைப்பு படகு போக்குவரத்து தடை
x
தினத்தந்தி 12 May 2020 6:52 AM IST (Updated: 12 May 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொள்ளிடம், 

கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடியம்பாளையம் கிராமத்தில் இருந்து பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு கடல் வழியாக படகில் செல்லும் தோணித்துறை பாதையும் அடைக்கப்பட்டது. இதனால் பழையாறு துறைமுகத்துக்கு படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Next Story