புதுச்சேரியில் இருந்து சோப்பு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது


புதுச்சேரியில் இருந்து சோப்பு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 12 May 2020 7:41 AM IST (Updated: 12 May 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து சோப்பு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது.

உளுந்தூர்பேட்டை,

புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சோப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. அந்த லாரியை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூரை கடந்து சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

லாரியில் இருந்த சோப்புகள் சிதறிக்கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அதனை அள்ளிச்சென்றனர். இதை பார்த்த திருநாவலூர் போலீசார், அவர்களை துரத்திச் சென்றனர். போலீசாரை கண்டதும் பொதுமக்கள் சோப்புகளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story