திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் வீடு திரும்பினர்
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது.
4 பேர் டிஸ்சார்ஜ்
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 36, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3, ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 121 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் நேற்று பூரண குணம் அடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 55 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 76 பேர் இதுவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
45 பேருக்கு சிகிச்சை
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 9பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 45 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் ‘பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் சுகாதாரத்துறை பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும், மேலும் திருச்சியை விரைவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்’ என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story