ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூசாரிகள் முற்றுகை
பரமக்குடி அருகே பூசாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் பொன்அரியசாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை பூசாரிகளுக்கு அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை மேலப்பார்த்திபனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் அரசின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த 20-க்கும் மேற்பட்ட பூசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்த்திபனூரில் உள்ள மேலப்பார்த்திபனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பார்த்திபனூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஆவணங்களை ஆய்வு செய்து ஊரடங்கு காலம் முடிந்த பின்பு முடிவெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தை பூசாரிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story