ஸ்ரீவில்லிபுத்தூரில், ஊரடங்கு தளர்வால் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அகற்றம்
ஊரடங்கு தளர்வு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் முக்கிய சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே வருவதை தடுப்பதற்காக நகரில் 11 முக்கிய இடங்களில் உள்ள சாலைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேரிகார்டுகள் மற்றும் கம்புகள் வைத்து தடுப்பு அமைத்தனர். மேலும் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கினை படிப்படியாக தளர்வு செய்து வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை பொறுத்தவரை பேட்டை கடைத்தெரு, மாதாகோவில் தெரு, சிங்கமாள்புரம் தெரு, நந்தவனப்பட்டி, ஆத்து கடைத்தெரு சந்திப்பு, மம்சாபுரம் சந்திப்பு, கோட்டை தலைவாசல் பகுதி, மங்காபுரம் செல்லும் சாலை உள்பட 11 இடங்களில் வாகனம் வராத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு வாகனங்களில் சென்று பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி அமைக்கப்பட்ட தடுப்புகள் ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story