அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 May 2020 12:20 PM IST (Updated: 12 May 2020 12:20 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 33 பேர்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆவார்கள். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே மொத்தம் 275 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 33 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால், பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 33 பேரின் விவரம் வருமாறு:-

அரியலூர், எம்.புதூர், ஆதனூர், பாளையக்குடி, வஞ்சினாபுரம், சிறுகளத்தூர், கல்லக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர், கீழ எசனையில் 2 பேர், செந்துறையை சேர்ந்த 9 பேர், நமங்குணத்தை சேர்ந்த 7 பேர், வளரக்குறிச்சி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேர் உள்பட 33 பேர் ஆவர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 33 பேரில் 28 பேர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்களும், 5 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூரில் ஒரு பெண்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மதனகோபாலபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணுக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104-ல் இருந்து 105 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அவரது கணவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 58 பேரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் முடிவுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் மொத்தம் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்து சுகாதாரத்துறையினர் சுகாதாரப்பணிகளிலும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story