2 ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
ஆத்தூர் ஒன்றியம், செட்டியபட்டி, காந்திகிராமம் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
சின்னாளபட்டி,
ஆத்தூர் ஒன்றியம், செட்டியபட்டி, காந்திகிராமம் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செட்டியபட்டி பிரிவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.டி.நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழிபாலாஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துப்பட்டது. பின்னர் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கோபி, காந்திகிராம அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜலட்சுமி சந்தானகிருஷ்ணன், வெண்ணிலா தெய்வீக ராணி அருள்சாமி, காந்திகிராம ஊராட்சி மன்ற தலைவர் தங்க முனியம்மா, கலிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி இணை செயலாளர் வக்கம்பட்டி அந்தோணிசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பித்தளைபட்டி நடராஜன், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் பழனிசாமி (செட்டியபட்டி) சந்தானகிருஷ்ணன் (ஆலமரத்துப்பட்டி) கே.பழனிசாமி (கலிக்கம்பட்டி), முன்னாள் செயலாளர் மச்சக்காளை, செட்டியபட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரேவதி, சின்னாளபட்டி நகர செயலாளர் கணேஷ் பிரபு, முன்னாள் செயலாளர் சக்கரபாணி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கம், செட்டியபட்டி ஊராட்சி மன்ற செயலாளர் முத்துப்பாண்டி, காந்திகிராம மன்ற செயலாளர் தெய்வம் மற்றும் செட்டியபட்டி, காந்திகிராம ஊராட்சி அ.தி.மு.க.கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story