கருப்பு பேட்ஜ் அணிந்து மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கருப்பு பேட்ஜ் அணிந்து மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2020 12:54 PM IST (Updated: 12 May 2020 12:54 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல், 

திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு செயலாளர் ஜெபாஸ்டின் தலைமை தாங்கினார். 

தலைவர் லோகநாதன், பொருளாளர் மாரியப்பன், சுகாதார ஆய்வாளர் சங்க மாநில பொறுப்பாளர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். அப்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெட்டப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

Next Story