திருவள்ளூரில் மாயமான டிரைவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை


திருவள்ளூரில் மாயமான டிரைவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2020 4:00 AM IST (Updated: 13 May 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கார் டிரைவர் மாயமான நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 51). இவர் திருவள்ளூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி அன்று அந்தோணி பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து கொண்டு காரில் திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று திரும்பியுள்ளார்.

இதற்கிடையே திருவள்ளூருக்கு சென்று வந்த அவர், வீட்டுக்குச் செல்லாமல் மாயமானதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்து வீட்டில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு

இந்நிலையில் மாயமான டிரைவர் அந்தோணி நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக் டர் அலுவலகத்தின் பின்புறத்தில் மர்மமான முறையில் இறந்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் சாலமன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த அந்தோணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story