திருவலம் அருகே நடந்த 3 பேர் கொலையில் துப்புதுலக்கிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் - போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
திருவலம் அருகே நடந்த 3 பேர் கொலையில் துப்புதுலக்கிய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
ஊரடங்கை முன்னிட்டு சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் கடந்த மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு கும்பலாக இருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்களும் மேலும் சிலரும் சேர்ந்து திருவலம் அருகே 3 பேரை கொலை செய்து புதைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட 3 பேரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டது.
சிப்காட் போலீசார் பிடித்த 3 பேருடன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை கொலை செய்ததை முதலில் தங்களின் விசாரணை மூலம் துப்பு துலக்கிய ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிப்காட் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், போலீஸ்காரர்கள் சதீஷ், வினோத் ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story