கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் உலக செவிலியர் தின விழா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு, பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு அவர் பேசியதாவது:-
அதிக நெருக்கடிகளுக்கு இடையே செவிலியர்கள் பொறுமையுடன் பணியாற்றுகிறார்கள். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். செவிலியர்கள் நேயாளிகளின் நலனில் காட்டும் அக்கறை, அவர்களை ஊக்குவிக்குகிறது. உலக அளவில் செவிலியர்கள் தேவை மிக அதிகளவில் அதிகரித்து உள்ளது.
சுகாதாரத்துறையில் செவிலியர்களின் சேவை மகத்தானது. கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது. இந்த போரில் அவர்கள் முன்களத்தில் நின்று வீரர்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்களின் சிறப்பான சேவையை வழங்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
நர்சிங் அதிகாரி என பெயர் மாற்றம்
விழாவில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பேசும்போது, “மருத்துவத்துறையில் செவிலியர்கள் முதுகெலும்பாக செயல்படுகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்களின் பங்கு மிகப்பெரியது. அவர் களின் சேவை இல்லாவிட்டால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் பிரச்சினையில் சிக்கிவிடும். மத்திய அரசு செவிலியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. செவலியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் செவியர்களுக்கு நர்சிங் அதிகாரி என்று பெயர் மாற்றியுள்ளோம் என்றார்.
இந்த விழாவில் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜாவித் அக்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story