கொரோனா ஒழிப்பில் புதுவை மாநிலம் முன்மாதிரியாக திகழ்கிறது முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதம்
கொரோனா ஒழிப்பில் புதுவை மாநிலம் இந்தியாவிலேயே முன் மாதிரியாக திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் நாரா யணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் மல்லிகா தலைமை தாங்கினார். செவிலியர்கள் வீரம்மா, கல்பனா மற்றும் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-
சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனாவை எதிர்ப்பதில் நாம் வெற்றி அடைந்துள்ளோம். அதற்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது தான். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று செவிலியர்களாகிய நீங்கள் அறிவுறுத்தியது தான் காரணம். கொரோனாவை ஒழிப்பதில் செவிலியர்களின் பணி முக்கியமானது. உங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்களுக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்மாதிரி மாநிலம்
கொரோனா ஒழிப்பில் புதுவை மாநிலம் இந்தியாவிலேயே முன்மாதிரியாக திகழ்கிறது என்றால் அதற்கு காரணம் உங்களுடைய பணி தான். எனவே தான் தற்போது எந்த விழாவை நடத்தாமல் இருந்தாலும் உலக செவிலியர் தினத்தை நடத்தி அதில் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமென்று நாங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளோம். உங்கள் பணி தொடர வேண்டும்.
புதுவையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் உங்களுடைய பங்கு முக்கியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story