வெவ்வேறு சம்பவங்களில் தீயில் கருகி 2 பெண்கள் சாவு
திருச்சியில் தீயில் கருகி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
திருச்சி,
திருச்சியில் தீயில் கருகி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
2 பெண்கள் சாவு
* திருச்சி வடக்கு தாராநல்லூரை சேர்ந்த ராமசாமியின் மனைவி ரத்தினமதி(வயது 78). வீட்டின் 2-வது தளத்தில் ரத்தினமதியும், தரைத்தளத்தில் அவருடைய மகன் சரவணனும் வசித்து வந்தனர். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரத்தினமதி, வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று முன்தினம் இரவு மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* திருச்சி உடையான்பட்டி வசந்தநகரை சேர்ந்த புனிதா(57) , சமைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த இரவு உடையில் தீ பற்றிக்கொண்டது. இதில் உடல் கருகிய அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 லிட்டர் சாராயம் பறிமுதல்
* திருச்சி வரகனேரி சூரஞ்சேரி வாய்க்கால் கரையோரம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த காந்திமார்க்கெட் போலீசார், இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிவா, அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.
* திருவெறும்பூரை அடுத்த கீழகல்கண்டார்கோட்டை பகுதியில் சாராயம் காய்ச்சியதாக பெரியார்நகரை சேர்ந்த சந்துருவை (48) திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
சூதாடிய 8 பேர் கைது
* திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லங்குளம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக பாலமுருகன்(26), ஸ்டீபன்ராஜ்(22) ஆகிய 2 பேரையும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
* திருச்சி சிந்தாமணி பதுவைநகரில் பணம் வைத்து சூதாடியதாக அய்யப்பன்(38), சிவசங்கர்(36), செல்வம்(40), யோக்நாத்(41), பரமேஷ்(43) மற்றொரு செல்வம் (49) ஆகிய 6 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.760 பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவி மாயம்
* திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன்-உஷாராணி தம்பதியின் மகள் ஸ்ரீநிதி(15) எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாணவியின் பெற்றோர் இதுபற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.
லாரி மோதியதில் ஒருவர் பலி
* மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(50) நேற்று உடையாபட்டியை சேர்ந்த பூ வியாபாரி சேவியரின்(60) மொபட்டில் லிப்ட் கேட்டு சென்ற போது, மணப்பாறை மார்க்கெட் அருகே லாரி ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சேவியர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாய தொழிலாளர்கள் மனு
* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து அட்டைதாரர்களுக்கு 100 நாள் வேலை வழங்கிட வேண்டும். 30 நாட்களுக்கான தினக்கூலி நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனுக்களை அளித்தனர்.
* அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
* மணப்பாறை என்.சி.பி.எம். பேட்டை பகுதியில் வசித்து வந்த 65 வயது முதியவர் டெல்லியில் இருந்து ஊருக்கு வந்ததால் தனிமை படுத்தப்பட்டு இருந்தார். அவருக்கு 2 முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். அவர் ஆஸ்துமாவினால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story