மாமல்லபுரம் புராதன சின்னங்கள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு


மாமல்லபுரம் புராதன சின்னங்கள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 May 2020 10:30 PM GMT (Updated: 13 May 2020 10:21 PM GMT)

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் சரிவர பராமரிக்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டது.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கணேச ரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட முக்கிய புராதன சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக உள்ளன.

தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 50 நாட்களாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அனைத்தும் மூடப்பட்டு பார்வையாளர்கள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆளில்லா குட்டி விமானம் மூலம்...

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட புராதன சின்னங்கள் அனைத்தும் தொல்லியல் துறை பணியாளர்கள் மூலம் சரிவர பராமரிக்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள டெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறை இயக்குனரகம் இந்தியாவில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ காட்சிகள் எடுத்து அறிக்கையாக அனுப்ப உத்தரவிட்டது.

இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் நேற்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் மேற்பார்வையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஒவ்வொரு பகுதியாக வீடியோ காட்சி எடுத்து அறிக்கையாக அனுப்பப்பட்டது.

Next Story