திருவாரூர் மாவட்டத்தில் 8 தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் பணியிட மாற்றம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் ஒரு தனிப்பிரிவு ஏட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் ஒரு தனிப்பிரிவு ஏட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பலர் ஒரே பகுதியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் தனிப்பிரிவு ஏட்டுகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்பட 8 இடங்களில் பணி புரிந்த தனிப்பிரிவு ஏட்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் சிலர் சட்ட ஒழுங்குக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் தனிப்பிரிவு ஏட்டுக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story