பெல் நிறுவனம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


பெல் நிறுவனம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2020 5:48 AM IST (Updated: 14 May 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

பெல் நிறுவனம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் முன்பு நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் மாத ஊதியம் மற்றும் ஊரடங்கு காலத்திற்கான ஊதியம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பெல் நிர்வாகம் தரப்பில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதயைடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஊரடங்கு நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பெல் தொழிற்சாலை முன்பு திரண்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story