திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 3 பேர் கண்காணிப்பு


திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 3 பேர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 15 May 2020 5:00 AM IST (Updated: 15 May 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 3 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை மையமும் அங்கு தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இதற்கிடையே இந்த கொரோனா வார்டில் 6 பேர் கண்காணிப்பில் இருந்தனர். தற்போது 3 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மட்டுமே கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலர் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தோம். இதில் தொற்று இருந்தவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக 6 பேர் தொடர்ந்து கொரோனா வார்டில் கண்காணிப்பில் இருந்தார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் 3 பேருக்கு எந்தவித மாற்றமும் இல்லாததால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் ஒரு ஆண் மற்றும் 2 பெண்கள் என 3 பேர் மட்டுமே கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story