பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 15 May 2020 3:55 AM IST (Updated: 15 May 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 133 பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் குன்னம் தாலுகா பெண்ணக்கோணம் கிராமத்தை சேர்ந்த 55, 39, 36, 48 வயதுடைய 4 ஆண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 வயதுடைய நபர் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133-ல் இருந்து 137 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 பேரும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்டத்தில் 4 கர்ப்பிணிகள் உள்பட 30 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 67 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஏற்கனவே 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

79 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். முன்னதாக அவர்களுக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் பழங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தனர். கொரோனா வைரசால் பாதிக் கப்பட்ட மீதமுள்ள 79 பேரில், 23 பேர் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையிலும், 48 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், 3 பேர் மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story