திருச்சிற்றம்பலம் கடைவீதியில் குறைந்த விலைக்கு கிடைக்கும் காய்கறிகள்-கீரை வகைகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் குறைந்த விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்,
கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் குறைந்த விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
காய்கறிகள்-கீரைவகைகள்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள கிராம பகுதிகளான பொக்கன்விடுதி வடக்கு, பொக்கன்விடுதி தெற்கு, சித்துக்காடு, வலசக்காடு மற்றும் பல கிராம பகுதிகளில் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரை வகைகள் தினமும் திருச்சிற்றம்பலம் கடைவீதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கொண்டு வந்து விற்கப்படுகின்றன.
இவை தவிர சர்க்கரை நோய்க்கான குறிஞ்சா கீரை, மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை, ஞாபகசக்தியை ஊக்குவிக்கும் வல்லாரை கீரை ஆகியவையும் தினமும் கிடைக்கின்றன. பெரிய காய்கறி கடைகளில் கிடைக்காத சுண்டைக்காய், வாழைத்தண்டு உள்ளிட்டவையும் இங்கு தினமும் கிடைக்கிறது.
குறைந்த விலைக்கு விற்பனை
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் காய்கறிகள், கீரைவகைகள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. இதையடுத்து கடைவீதிக்கு பொதுமக்கள் வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து காய்கறி, கீரைகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் அனைத்து காய்கறிகளையும் தாங்களாகவே கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனை பொதுமக்கள் தினமும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் ரசாயன கலப்பு இன்றி உடனுக்குடன் காய்கறிகள் கிடைப்பதால் அவை அனைத்தும் தரமானதாக உள்ளது. ெ-்காரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப போதுமான காய்கறிகள் கிடைக்காத நேரத்தில், கிராமப்புறத்தில் விளைவிக்கப்பட்ட அனைத்து காய்கறிகளையும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story