வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி தந்தையுடன் கைது


வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி தந்தையுடன் கைது
x
தினத்தந்தி 15 May 2020 4:59 AM IST (Updated: 15 May 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

காட்பாடி,

காட்பாடி வஞ்சூரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 28). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு அருகில் உள்ள சர்க்கார் தோப்புப்பகுதியில் சுனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அப்பகுதியில் வசித்த கோகிலா என்ற பெண்ணுக்கும் சுனிலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கோகிலாவும் அவரது தந்தை முத்துவும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த வழக்கில் ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் மணிகண்டன், காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோகிலாவுக்கு சுனில் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தான் கொலை செய்தோம் என மணிகண்டன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கோகிலா, முத்து ஆகியோரை காட்பாடியில் விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story