திருவாரூர் மாவட்டத்தில் ரூ.20 கோடியில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் காமராஜ் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.20 கோடியில், 88 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.20 கோடியில், 88 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
குடிமராமத்து திட்ட பணிகள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் மற்றும் பில்லூர் ஊராட்சிகளில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்ட பணிகளை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, லதா மகேஸ்வரி, சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. ஜெயபிரீத்தா, நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலெட்சுமி, துணைத்தலைவர் அன்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத்் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் உரிமைகளுக்காக...
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் விவசாயம் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும், உரிமைக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
குறிப்பாக நமது பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற மக்களை அச்சுறுத்தி வந்த திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
குடிமராமத்து திட்டம்
தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து திட்டம் முதல்-அமைச்சரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்்வாருதல்், பழுதடைந்த கட்டுமானங்களை புணரமைத்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குடிமராமத்து பணிகளானது பயன்பெறும் விவசாயிகளினால் பாசனதாரர் சங்கம் அமைத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பணியின் திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.500 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், குடிமராமத்து பணியானது செயல்படுத்தப்பட்ட முதலாண்டில் ரூ.100 கோடி மதிப்பில் தொடங்கி 1519 குடிமராமத்து பணிகளும், 2017-2018-ம் ஆண்டில் ரூ.331 கோடி மதிப்பீட்டில் 1,523 குடிமராமத்து பணிகளும், 2019-2020-ம் ஆண்டில் ரூ.499 கோடி மதிப்பீட்டில் 1,829 குடிமராமத்து பணிகளும்் நடந்துள்ளது.
நடப்பாண்டு 2020-2021-ல் ரூ.499 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய்து 1,387 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.20 கோடியில் பணிகள்
இதில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.20 கோடியே 23 லட்சம் மதிப்பில் 88 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் அடிப்படையில் நன்னிலம் வட்டம் ஆனைக்குப்பம் ஊராட்சியில் வளப்பாற்றின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பில் நீரொழுங்கி புணரமைக்கும் பணியும், பில்லூர் ஊராட்சியில் பில்லூர் வாய்க்கால் ரூ.12 லட்சம் மதிப்பில் 13 கி.மீ. தூரம் தூர்வாரும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளானது பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 கன அடி தண்ணீர் இருந்து வருவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தமிழக முதல்-அமைச்சர், விவசாயிகளில் ஒருவராக திகழ்ந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதையே கடமையாக கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story