பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்

பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 15 May 2020 5:51 AM IST (Updated: 15 May 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ரெயிலடி அருகே ராதாகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள குளத்தில் நிரம்பி துர்நாற்றம் வீசியது.

குத்தாலம், 

மயிலாடுதுறை ரெயிலடி அருகே ராதாகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள குளத்தில் நிரம்பி துர்நாற்றம் வீசியது. 

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் அவதிப்படுவதாக கடந்த 12-ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் அண்ணாமலை என்கிற புவனேஸ்வரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அப்பபகுதி மக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. உடனடியாக தீர்வு காணப்படும் என்றார். அதனை தொடர்ந்து மாமரத்து மேடை அருகே பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டியில் இருந்து சாக்கடை வழிந்து ஓடிக்கொண்டிருப்பதை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். 

பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளை ஓரிரு நாட்களில் சரி செய்து, சாக்கடைகள் நீர் வெளியேறாதபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது அவருடன் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story