செங்கம் அருகே ரூ.96 லட்சத்தில் ஏரி சீரமைக்கும் பணி - வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


செங்கம் அருகே ரூ.96 லட்சத்தில் ஏரி சீரமைக்கும் பணி - வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 May 2020 6:12 AM IST (Updated: 15 May 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே ரூ.96 லட்சத்தில் ஏரி சீரமைக்கும் பணியை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

செங்கம், 

செங்கம் அருகே காரப்பட்டு ஏரியை தூர்வாரி மதகுகள் போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து ரூ.96 லட்சம் மதிப்பில் காரப்பட்டு ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், கூட்டுறவு சங்கத்தலைவர் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதுப்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முககவசம் அணியாமல் வந்திருந்த கர்ப்பிணிகள், தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினார். டாக்டரிடம் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகள் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து புதுப்பாளையம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story