கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தினை மத்தியக்குழு உறுப்பினர் சுதா தொடங்கி வைத்தார். இதில் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 3 மாத காலத்திற்கு வழங்க வேண்டும், ஏழை குடும்பங்களில் உள்ள நபருக்கு 10 கிலோ வீதம் தரமான இலவச அரிசி வழங்கவேண்டும், பிரதமர் பாதுகாப்பு நிதியில் இருந்து கொரோனா நோய் தடுப்பு மற்றும் மருத்துவமனை கட்டமைப்புகளை வலுப்படுத்த புதுவைக்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும், ஆட்சியில் குழப்பத்தையும், நிர்வாகத்தில் பிளவையும் ஏற்படுத்தும் கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story