திருச்சி நகரில் உள்ள 10 தற்காலிக காய்கறி சந்தைகள் 17-ந்தேதி செயல்படாது


திருச்சி நகரில் உள்ள 10 தற்காலிக காய்கறி சந்தைகள் 17-ந்தேதி செயல்படாது
x
தினத்தந்தி 15 May 2020 8:51 AM IST (Updated: 15 May 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மூடப்பட்டது.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மூடப்பட்டது. இதையடுத்து காய்கறிகள் மொத்த வியாபாரம் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்து வருகிறது. 

பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக 10 இடங்களிலும் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக காய்கறி சந்தைகள் அனைத்தும் மே 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று செயல்படாது. மேலும் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் இயங்கி வரும் காய்கறி மொத்த வியாபார கடைகள் நாளை (சனிக்கிழமை) இரவு செயல்படாது என்று கலெக்டர் எஸ்.சிவராசு அறிவித்து உள்ளார்.

மேலும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்தை நடத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். 

ஆகவே காய்கறி மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் அரசு அறிவித்து உள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி முககவசம் அணிந்து கொண்டும், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் இன்று இரவு தங்கள் வணிகத்தை தொடரலாம்.

Next Story