திருப்பூர் மாவட்டத்தில் 164 பேருக்கு கொரோனா பரிசோதனை


திருப்பூர் மாவட்டத்தில் 164 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 16 May 2020 3:45 AM IST (Updated: 16 May 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 164 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

திருப்பூர், 

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் (ஆர்.டி.பி.சி.ஆர்.) இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வரைமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன பரிசோதனை மையம் இயங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ளது. கொரோனா நோய் தொற்றை விரைந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் இந்த நவீன பரிசோதனை மையம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 164 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாநகர பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை மையத்தில் சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, கொரோனா சிறப்பு வார்டில் தற்போது 3 பேர் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களுக்கு இதுவரை தொற்று கண்டறியப்படவில்லை. மாநகரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 2 பேருக்கு ரத்தம்,சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என்றனர்.

Next Story