அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன் மரணம் - முதல்-அமைச்சர் இரங்கல்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன் மரணம் - முதல்-அமைச்சர் இரங்கல்
x
தினத்தந்தி 16 May 2020 5:00 AM IST (Updated: 16 May 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன் மரணத்திற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.

ஆரணி,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும், தலைமை கழக பேச்சாளரும், ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெமினி கே.ராமச்சந்திரன் சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நேற்று பகல் 3 மணியளவில் ஆரணி - ஆரணிப்பாளையம், சாந்தா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

அவரது மறைவுக்கு அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரனை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.

ஜெமினி கே.ராமச்சந்திரனின் மனைவி ஜானகி அம்மாள் கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இவர்களுக்கு 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.

Next Story