கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரத்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் - நடிகர் ஷாருக்கான் வேண்டுகோள்
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரத்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க பொது மக்கள் முன்வரவேண்டும் நடிகர் ஷாருக்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை,
நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
நாம் அனைவரும் கண்ணால் பார்க்க முடியாத கொரோனா வைரசால் நெருக்கடியை அனுபவித்து வருகிறோம்.
இந்த வைரசை எதிர்த்து போராடும் நம் நாட்டின் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவத் துறை வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு நிகரானவர்கள். இத்தகைய பணியை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கையுறைகள், முக கவசங்கள், பாதுகாப்பு உடை போன்ற உபகரணங்கள் தேவைப்படும்.
நீண்டதூர பயணம்...
எனவே நமது சுகாதார வீரர்களை பாதுகாக்க உதவும் வகையில் எனது மீர் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் துணிச்சலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்களை ஆதரிப்போம்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஒரு சிறிய உதவி நீண்ட தூரம் பயணிக்க நமக்கு தேவையானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் ஷாருக்கான் மராட்டியம் மற்றும் மேற்குவங்க அரசுடன் இணைந்து தனது அறக்கட்டளை சுகாதார பணியாளர்களுக்கு சுமார் 50 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் ஆகியோர் தங்கள் 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story