ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்
ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
கோட்டூர்,
ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
அமைச்சர் பேட்டி
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அ.தி.மு.க. சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள், சலவை தொழிலாளிகள் மற்றும் முடி திருத்துவோர், கூடைமுடைவோர் உள்ளிட்ட 14 வகையான நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் ராஜாசேட், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், கார்த்திகேயன், மகேஸ்வரி, சற்குணம், திலகவதி, சிவசுப்பிரமணியன் கூட்டுறவு வங்கி தலைவர்கள் பாலகிருஷ்ணன், மாசிலாமணி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
பச்சை மண்டலமாக மாறும்
தமிழக முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. திருவாரூர் மாவட்டத்துக்கு கோயம்பேடு பகுதியில் இருந்து வந்த ஆயிரம் பேரில் இருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 29 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் இன்னும் சில நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள். இதனால் திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும்.
காலியிடங்கள் நிரப்பப்படும்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை 80 சதவீதம் பேர் வாங்கி விட்டனர். ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பகுதியில் இருந்து கொரோனா தொற்று பரவியதாக முதல்-அமைச்சர் கூறவில்லை. அவர் பேசியது திரித்து கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை
இதேபோல் திருத்துறைப்பூண்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,500 பேருக்கு அத்தியாவசி பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதில் நகர செயலாளர் சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், முன்னாள் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், தாசில்தார் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முத்துப்பேட்டையில் 800 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கனியமுதாரவி, ஒன்றிய ஆணையர் வெற்றியழகன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story