கொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


கொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 May 2020 5:02 AM IST (Updated: 16 May 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என நாகை கலெக்டர் பிரவீன்நாயர் அறிவுறுத்தி உள்ளார்.

நாகப்பட்டினம், 

கொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என நாகை கலெக்டர் பிரவீன்நாயர் அறிவுறுத்தி உள்ளார்.

மருத்துவக்கழிவுகள்

நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவக்கழிவுகளை தனியாக பிரித்து மருத்துவக்கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிபெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முக கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும்.

சேமிக்க கூடாது

முக கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டு களாக்கி வெளியேற்ற வேண்டும். பிற கழிவுகளுடன் கொரோனா நோய் தொற்று நோயாளிகளின் கழிவுகள் சேர்க்கவோ, சேமிக்கவோ கூடாது. 24 மணிநேரங் களுக்கு மேல் கொரோனா நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைக்க கூடாது. கொரோனா நோய் தொற்று அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. கொரோனா தொற்று உள்ளவர்களின் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story