குமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை


குமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2020 5:38 AM IST (Updated: 16 May 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனு

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கூட்டாக கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதன்பிறகு வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தரமான உணவு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இ-பாஸ் பெற்று ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கின்றனர். முன்னதாக பரிசோதனை செய்யும்போது 25 பேர் சேர்ந்தவுடன், அவர்கள் மொத்தமாக விடுதிக்கு அனுப்புகின்றனர். அப்படி செய்யாமல் பரிசோதனை செய்யும் நபர்களை உடனுக்குடன் விடுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சரியில்லை என புகார்கள் வருகின்றன. தரமான உணவுகளை வழங்க அறிவுறுத்தி உள்ளோம்.

டீக்கடைகள்

டீக்கடைகளை காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாவட்டம், மாநிலங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். உண்ணாமலைக்கடையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

அகஸ்தீஸ்வரத்தில் உள்ள சோப்பு கம்பெனி செயல்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த கட்டிடத்தை அரசு பயன்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story