பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் குமரியில் 3 இடங்களில் நடந்தது


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் குமரியில் 3 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 16 May 2020 5:49 AM IST (Updated: 16 May 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் தரைவழி தொலைபேசி இணைப்பு பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் கொடுக்கப்படுவதாகவும், அதை வாபஸ் பெற வலியுறுத்தியும், ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்றும், சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜூ, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தக்கலை, குழித்துறை

இதே போல தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய இடங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் முன்பும் ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story