கலசபாக்கம் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு வர மறுப்பு - கெஞ்சி கூத்தாடி ஆம்புலன்சில் ஏற்றினர்
கலசபாக்கம் அருகே கொரோனாவால் பாதிக் கப்பட்டவர் மருத்துவமனைக்கு வர மறுத்தார். அவரிடம் கெஞ்சி, கூத்தாடி ஆம்புலன்சில் ஏற்றினர்.
கலசப்பாக்கம்,
கலசபாக்கம் பகுதியில் உள்ள அணியாலை, நயம்பாடி மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வள்ளிவாகை, எரும்பூண்டி, வேடந்தவாடி, ஆனந்தல் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கலசபாக்கத்தை அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 10-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்த போது அவரை மருத்துவ பரிசோதனை செய்து 14 நாட்கள் மண்டபத்தில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். பின்னர் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனை அறிந்த கடலாடி மருத்துவ குழுவினர் அவருடைய வீட்டுக்கு சென்று மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். அதற்கு அவர் நான் நலமாக இருக்கிறேன், எதற்காக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும், நான் வரமாட்டேன் என்றும் அடம் பிடித்துள்ளார். ஆனால் மருத்துவ குழுவினர் அவரிடம் கெஞ்சி கூத்தாடி சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story