சரக்குகளை அனுப்ப முன்பதிவு அதிகம் வருவதில்லை: சிரமமான நிலையில் லாரி போக்குவரத்து


சரக்குகளை அனுப்ப முன்பதிவு அதிகம் வருவதில்லை: சிரமமான நிலையில் லாரி போக்குவரத்து
x
தினத்தந்தி 16 May 2020 7:50 AM IST (Updated: 16 May 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

சரக்குகளை அனுப்ப முன்பதிவு அதிகம் வருவதில்லை எனவும், சிரமமான நிலையில் லாரி போக்குவரத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை, 

சரக்குகளை அனுப்ப முன்பதிவு அதிகம் வருவதில்லை எனவும், சிரமமான நிலையில் லாரி போக்குவரத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2,500 லாரிகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் லாரி போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் தெரிவித்ததாவது:-

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவு தானியப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கொண்டு செல்லப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 லாரிகள் உள்ளது. இதில் மிக சொற்ப அளவு லாரிகள் மட்டுமே இயங்குகிறது. இதில் வெளியூரில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயில்கள் மூலம் வரும் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மாவட்டத்திற்கு உள்ளே மட்டும் கொண்டு செல்லப்படுகிறது.

டிரைவர்கள் அச்சம்

மேலும் ஒப்பந்தம் அடிப்படையில் இயங்கும் லாரிகள் மட்டும் இயங்குகிறது. கொரோனா தொற்று பரவும் இந்த வேளையில் லாரிகள் ஓட்டுவதற்கு டிரைவர்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் டிரைவர் பணிக்கு அதிகம் யாரும் வருவதில்லை. மேலும் தொழிற்சாலைகளோ அல்லது வணிக நிறுவனங்களோ இயங்காததால் சரக்கு எடுத்துச்செல்ல முன்பதிவு அதிகம் ஆவதில்லை.

பொதுவாக லாரியுடன் டிரைவரும் லோடு மேனும் செல்வது வழக்கம். ஆனால் டிரைவரே கிடைக்காத நிலையில் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் லாரிகள் பழுது ஏற்பட்டாலும் அதை சரிசெய்ய மெக்கானிக் இல்லை. எனவே லாரிகளை இயக்குவதற்கு அச்சம் தெரிவிக்கின்றனர். லாரி லோடு சென்று இறக்கிய பின்பு மீண்டும் மறுலோடு கிடைப்பதில்லை. எனவே இந்த ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னரே லாரிகள் முழுமையாக இயங்கி இயல்புநிலைக்கு திரும்பும். லாரி போக்குவரத்து சீராகததால் புதுக்கோட்டையில் லாரிகள் நிறுத்துமிடத்தில் வரிசையாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story